இந்தியாவில் சாதி மாறி காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போன இளம் பெண்ணை அரை நிர்வாணக் கோலத்தில் ஊர்மக்கள் அடித்து ஊர்லமாக அழைத்துச் சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேசம் அலிராஜ்புர் எனுமிடத்தில் சாதி மாறி காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போன இளம் பெண்ணை  சேலையை உருவி அரை நிர்வாணக் கோலத்தில் ஊர்மக்கள் அடித்து ஊர்லமாக திரும்ப ஊருக்கு அழைத்துச் சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

Tamil Girls Chat Room

அதில், 19 வயது பழங்குடி இளம்பெண்ணின் சேலையை உருவி சாலையில் அவரின் உறவினர்களும், பொதுமக்களும் அவரை குச்சியால் அடித்தபடி ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள்.

அந்த பெண் தன்னை விட்டுவிடும் படி அழுது கெஞ்சியும் அவர்கள் விடவில்லை.
பாதிக்கப்பட்ட பெண் வேறு சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து அவருடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

ஆனால் வாட்ஸ் ஆப்பில் பரவிய வீடியோ இது என்றும் எவ்வித புகாரும் இதுவரை வரவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர்.

இது தொடர்பில் எந்த புகாரும் எங்களுக்கு தரப்படவில்லை, புகார் வந்த பின்னரே நடவடிக்கை எடுக்க முடியும் என கூறியுள்ளனர்.

இருந்த போதிலும் வீடியோவில் உள்ள பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.