இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியிடம் வின்டீஸ் அணியுடனான தொடரின் போது சிறுவன் ஒருவர் ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உலகளவில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்து வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த போட்டியின் போது ஜமைக்காவில் தங்கியிருந்த விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் வெளியில் செல்லும் போது அவர்களை அடையாளம் கண்ட ஒரு சிறுவன் கேஹ்லியை அழைத்துள்ளான்.

முதலில் கோலியும், அனுஷ்காவும் ஆட்டோகிராப் வாங்கத் தான் தன்னை அழைக்கிறான் என் நினைத்து அருகில் சென்றபோது. அந்த சிறுவன் தான் வைத்திருந்த சீட்டில் அவனே ஆட்டோகிராப் போட்டு விராட் கோலிக்கும் வழங்கினான்.

Tamil Girls Chat Room

இதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், விராட் கோலி, அனுஷ்கா என எல்லோரும் சிரித்துவிட்டனர். மேலும் அனுஷ்கா தனக்கும் ஆட்டோகிராப் போட்டுத் தரும்படி அந்த சிறுவனிடம் ஒரு சீட்டை நீட்டினார். இந்த சம்பத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.