சேலத்தின் ஓமலூர் அருகே 11ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கட்டட தொழிலாளியை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாரமங்கலத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவியுடன், அங்கு கட்டட வேலை பார்த்து வரும் முருகன் என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Tamil Girls Chat Room

இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி மாணவியை முருகன் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். பெற்றோரின் புகாரை அடுத்து, முருகனை கைது செய்த போலீசார் மாணவியை மீட்டனர்.

விசாரணையில் மாணவியை கடத்தி, பல நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.