மனிஷா என்றபெண்ணை காதலித்து கல்யாணம் செய்துஒரு வாரம்கூட ஆகாதா நிலையில், அடித்து கொன்று தூக்கில் பிணமாக தொங்கவிட்டுள்ளார் அவரது கணவர் அபின்ராஜ்.

சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்த அபின்ராஜ். இவர் மினி வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதேபகுதியை சேர்ந்த மனிஷா என்ற பெண்ணை கடந்த 5 வருஷமாக காதலித்து வந்துள்ளார்.

Tamil Girls Chat Room

கடந்த  வருடத்துக்கு முன், கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி, அவரது வீட்டில் இருந்து அழைத்து கொண்டு போய், சொந்தக்காரர் வீட்டில் தங்க வைத்துள்ளார்.
காதலனை நம்பி வந்து நிலையில் திரும்பவும் வீட்டுக்கு போக முடியாமல் தவித்து வந்துள்ளார்.

மேலும், கல்யாணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். கல்யாணம் செய்துகொள்ளாமல் நாளுக்கு நாள் இருவருக்குள்ளும் நிறைய பிரச்சனைகள், தகராறுகளும் வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 6 மாசத்துக்கு முன்பு, மனிஷா கர்ப்பமானார். இதனால் உறவினர் வீட்டில் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், தனியாக வீடு எடுத்து இருவரும் தங்கினர்.

ஆனால், கர்ப்பமானாலும் கூட  கல்யாணம் செய்து கொள்ளவில்லை, தினமும் சொல்லி சொல்லி அழுத்த மனிஷாவின் வயிற்றில் அபின்ராஜ் ஓங்கி குத்தியதால், கர்ப்பமே கலைந்து, மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றிருக்கிறார்.

இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அபின்ராஜ் பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பெசன்ட்நகரில் மனிஷாவை கல்யாணம் செய்து கொண்டார். கல்யாணம் முடிந்து 7நாள் கழித்து மனிஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என மனிஷாவின் அப்பாவிற்கு தகவல் சொல்லப்பட்டது.

மகள் இப்படி அநியாயமாக தற்கொலை செய்து கொண்டாரே என்று நினைத்து இறுதி சடங்கும் செய்து முடித்தார். அதன்பிறகுதான், மனிஷாவின் செல்போனை பார்த்தபோது அதில் ஷாக் ஆடியோ ஒன்று இருந்தது.

அந்த ஆடியோவில், அபின் ராஜுக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு இருந்துள்ளது, அந்தப் பெண்ணிடம் மனிஷா தாலி பிச்சை கேட்டு அழுததும், ஏற்கனவே கர்ப்பம் கலைத்தது பற்றியும் பேசியது கேட்டு துடிதுடித்து போயுள்ளனர்.

தன மகளை அவன் கொன்றிருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டு, பல்லாவரம் போலீசில் புகார் அளித்தார். ஆனால் நடவடிக்கை இல்லை என்றதும், 50 பேர் ஆதரவுடன், துணை கமிஷனர் ஆபீசுக்கு சென்று மனிஷாவின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்று புகார் அளித்ததன்  பேரில் பிரவீன் ராஜ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.