தம்பதிகளின் உறவு மட்டுமல்ல திருமணம் மற்றும் புதுமனை புகுவிழா போன்ற சுப காரியங்களை கூட ஆடி மாதத்தில் நடத்தக் கூடாது என்று கூறுவார்கள்.

ஆடி மாதத்தில் சுபகாரிய விழாக்களை ஏன் நடத்தக் கூடாது?

புதிதாக திருமணம் முடிந்த தம்பதிகள் உறவு கொள்ளும் வாழ்க்கை, திருமணம், புதுமனை புகுவிழா இது போன்ற சுபகாரியங்களை செய்வதற்கு ஆடி மற்றும் மார்கழி மாதங்கள் ஏற்றதல்ல என்று நம் முன்னோர்கள் கூறுவதுண்டு.

Tamil Girls Chat Room

ஆனால் ஆடி மற்றும் மார்கழி ஆகிய இரண்டு மாதங்களையும் பீடை மாதங்கள் என்று சிலர் கூறுவது மிகவும் தவறான கருத்தாகும்.

ஏனெனில் ஆடி மற்றும் மார்கழி மாதங்கள் மக்களை இறைவழியில் அழைத்து சென்று அவர்களின் மனதை முழுவதுமாக இறைவனிடம் நிலைநிறுத்தும் தெய்வீகம் நிறைந்த மாதங்கள் என்பதே உண்மையாகும்.

எனவே இந்த இரண்டு மாதங்களிலும் தெய்வ சிந்தனையில் இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்துக் கூடாது என்று கூறுகின்றார்கள்.

தம்பதிகள் ஒன்று சேரக் கூடாது என்று கூறுவது ஏன்?

ஆடி மாதத்தில் திருமணம் நடைபெற்று தம்பதிகள் இருவரும் தங்களின் உறவில் ஒன்று சேர்ந்து, குழந்தை பாக்கியத்தை அடைந்தால், அந்தக் குழந்தை 10 மாதம் கழித்து சித்திரை மாதத்தில் பிறக்கும்.

சித்திரை மாதம் அதிக வெப்பமாக இருக்கும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக ஆரோக்கியம் இல்லாமல் இருக்கும்.

இதனால் தான் ஆடி மாதத்தில் திருமணம் செய்வதையும், கணவன்–மனைவி கூடி இருக்கவும் கூடாது என்று சொல்கிறார்கள்.