கிரிக்கெட் வீரர்களில் அதிக வயது வித்தியாசத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள் குறித்து இங்கு காண்போம்.

மகேந்திர சிங் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான வீரரான டோனி காதல் திருமணம் செய்துகொண்டவர். இவரது மனைவி சாக்‌ஷி இவரை விட 7 வயது குறைந்தவர். இவர்களுக்கு ஜிவா என்ற மகள் உள்ளார்.

Tamil Girls Chat Room

இர்ஃபான் பதான்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், சவுதி அரேபியாவைச் சேர்ந்த சஃபா பையிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் 10 ஆண்டுகள் ஆகும்.

ஷிகார் தவான்

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷிகார் தவான், கடந்த 2012ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆயிஷா இவரை விட 10 வயது மூத்தவர் ஆவார்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்த ஆயிஷா ஒரு குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஆயிஷா பேஸ்புக் மூலம் பழகி தவானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2014ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

சோயப் அக்தர்

பாகிஸ்தான் அணியின் அதிவேக பந்துவீச்சாளரும், ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படுபவருமான சோயப் அக்தர், கடந்த 2014ஆம் ஆண்டு ரூபப் கான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் 19 ஆண்டுகள் ஆகும். அதாவது அக்தருக்கு வயது 42, ரூபப் கானுக்கு வயது 23 ஆகும்.

வாசிம் அக்ரம்

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம், ஸ்விங் முறை பந்துவீச்சுக்கு பெயர் போனவர். இவர் கடந்த 1995ஆம் ஆண்டு ஹுமா மஃப்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் 2013ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக ஹுமா மரணமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷானிரா தாம்சன் என்பவரை வாசிம் அக்ரம் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 17 ஆண்டுகள் ஆகும்.

கிளென் மெக்ராத்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மெக்ராத்தின் மனைவி ஜேன் லூயிஸ், புற்றுநோய் பாதிப்பின் காரணமாக கடந்த 2008ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

அதன் பின்னர் சாரா லியோனர்டி என்ற பெண்ணுடன் மெக்ராத்துக்கு காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். மெக்ராத்திற்கு வயது 47, சாராவிற்கு வயது 35 ஆகும்.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் தன்னை விட ஐந்து வயது பெரிய பெண்ணான அஞ்சலியை 1990ஆம் ஆண்டு காதலிக்க தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இவர்களது திருமணம் 1995ஆம் ஆண்டு நடந்தது. சச்சினின் மகன் அர்ஜுன் தற்போது கிரிக்கெட்டில் கலக்கி வருகிறார்.

தினேஷ் கார்த்திக்

தமிழகத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரரான தினேஷ் கார்த்திக், முதலில் நிகிதா என்பவரை திருமணம் செய்தார். ஆனால் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

அதன் பின்னர், நிகிதா மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான முரளி விஜய்யை திருமணம் செய்துகொண்டார். தினேஷ் கார்த்திக், ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகாவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 6 ஆண்டுகள் ஆகும்.