பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாருக்கும் தெரியாமல் வெளியேறியவர் சரவணன். அவரை தொடர்ந்து மதுமிதா தானாகவே முன்வந்து வீட்டைவிட்டு வெளியேறினார்.
அதற்கு பின், கவின் அம்மாவின் கைது சம்பவம் பரபரப்பாக பேசப்பட, அவர் வீட்டைவிட்டு வெளியேறிவிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் அது நடக்கவில்லை.
தற்போது பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கவின் அம்மாவின் நிலை தற்போது என்ன என்று ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் ரவீந்தர் கூறியுள்ளார். குடும்பம் கொஞ்சம் தேறி வருகின்றனர், விரைவில் அவருக்கு பெயில் கிடைத்துவிடும்.
அடுத்தக்கட்ட நடவடிக்கையில் குடும்பம் ஈடுபட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
