தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், தாயுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டவரை, மகன், கூலிப்படையை ஏவி கொலை செய்தார்.

பாப்பாரப்பட்டி பாரதிபுரத்தை சேர்ந்தவர், ராஜா, 45. இவர், பாப்பாரப்பட்டி டவுனில், எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வந்தார்.

Tamil Girls Chat Room

இவருக்கு, மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரிந்தனர். ராஜா வீட்டின் அருகே வசிப்பவர், திலகவதி, 41. இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. திலகவதியின் கணவர் கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இவரது மகன் கவுதம், 21, டிப்ளமோ முடித்து விட்டு, வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம், இரவு, 10:00 மணிக்கு, ராஜாவை, அவரது வீட்டின் அருகிலேயே மர்ம கும்பல் கத்தியால், சரமாரியாக குத்தி கொலை செய்தது.

அப்பகுதியினர் சென்று பார்த்தபோது, திலகவதி மற்றும் கவுதம், ரத்த காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்துள்ளனர். அவர்களை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: ராஜா, திலகவதி இருவரையும் கவுதம் பலமுறை கண்டித்துள்ளார்.

ஆனாலும், அவர்கள் தொடர்ந்து பழகியதால், ஆத்திரமடைந்த கவுதம், இருவரையும் கொல்ல திட்டமிட்டு, கூலிப்படையை ஏவியுள்ளார். இருவரையும் கத்தியால் குத்தியதில், ராஜா இறந்து விட்டார்.

திலகவதி இறக்கவில்லை. அதிர்ச்சியடைந்த கவுதம் தன்னைதானே கத்தியால் குத்திக் கொண்டுள்ளார். தற்போது தாயும், மகனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலை செய்த கூலிப்படை குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.