கர்ப்பமாக இருப்பது தெரியாமல் இருந்த இளம்பெண் குளியலறையில் குழந்தை பெற்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் ஸ்டேசி போர்டர் (20). இவர் தனது காதலர் டேவிட் ஜான்ஸ்டன் உடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஸ்டேசிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து குளியலறைக்குள் ஸ்டேசி சென்ற போது அங்குள்ள தரையிலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
அந்த சமயத்தில் டேவிட் தூங்கி கொண்டிருந்ததால் ஸ்டேசி கத்தியும் அவருக்கு கேட்கவில்லை.
பின்னர் தூங்கி எழுந்த போது ஸ்டேசி கையில் குழந்தையுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த டேவிட் அனைத்து விடயங்களை கேட்டறிந்தார்.
இது குறித்து ஸ்டேசி கூறுகையில், நான் கர்ப்பமாக இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் எனக்கு தெரியவில்லை.
எனக்கு மாதவிடாய் சரியாக வந்தது, அதே போல கருத்தடை மாத்திரைகளையும் சாப்பிட்டு வந்தேன். ஆனாலும் எனக்கு குழந்தை பிறந்துவிட்டது என ஆச்சரியம் விலகாமல் கூறியுள்ளார்.