தங்கையின் திருமணத்திற்கு, ஆசையாக சென்ற அண்ணன் மற்றும் அவரது தாயார் விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்னமணலி பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 65). இவருக்கு மஞ்சுநாதன் (43) என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர்.

Tamil Girls Chat Room

பி.இ. பட்டம் படித்துள்ள மஞ்சுநாதன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அபிராமிக்கு விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தியாகதுருவம் பகுதியில் இன்று திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்த திருமணத்திற்காக ஒரு காரில் சரஸ்வதி, மஞ்சு நாதன், முகிலன் ஆகியோர் இன்று அதிகாலையில் புறப்பட்டனர். காரை அதே ஊரை சேர்ந்த டிரைவர் ஆனந்தகுமார் என்பவர் ஓட்டினார்.

எடப்பாடியில் இருந்து தியாகதுருவத்தை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. காலை சுமார் 6 மணிக்கு ஆத்தூர், அப்பம்மசமுத்திரம் என்ற இடத்தில் 4 வழிச்சாலையில் கார் சென்றபோது, 2 வழிச்சாலை வந்தது.

இதை கவனிக்காமல் ஆனந்தகுமார் காரை ஓட்டியதால் எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாலத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியது.

இந்த விபத்தில், கார் முன்பகுதி இருக்கையில் இருந்த மணப்பெண்ணின் சகோதரர் மஞ்சுநாதன் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னால் உள்ள இருக்கையில் இருந்த இவரது தாய் சரஸ்வதி உறவினர் முகிலன், டிரைவர் ஆனந்தகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் சரஸ்வதிக்கு 2 கால்களும் முறிந்தன. 3 பேரும் வலியால் கதறினர். அவர்களை, ஆத்தூர் புறநகர் போலீசார், பொது மக்கள் மீட்டனர்.

இந்த நிலையில் திருமணத்திற்கு வேனில் பின்னால் வந்து கொண்டிருந்த ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள், கார் விபத்தில் சிக்கியுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வேனை நிறுத்தி அங்கு சென்று பார்த்தனர். மஞ்சுநாதன் பலியாகி உள்ளதை கண்டு அவர்கள் கதறி அழுதனர்.

படுகாயம் அடைந்த சரஸ்வதி, முகிலன், ஆனந்தகுமார் ஆகியோர் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டடது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 3 பேரையும் டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே விபத்து குறித்து அபிராமியிடம் தெரிவிக்க வேண்டாம். திருமணம் தடைபடாமல் நடக்கட்டும் என மணப்பெண்ணின் உறவினர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அனைவரும் சம்பவ இடத்தில் இருந்து சோகத்துடன் புறப்பட்டு தியாக துருவத்திற்கு சென்றனர்.

தங்கை திருமணத்திற்கு சென்ற என்ஜினீயர் பலியான சம்பவம் சின்னமணலி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.