கணவர் குடும்பத்தாரின் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த 25 வயதான நிஷா என்கிற இளம்பெண் கடந்த 2017ம் ஆண்டு மும்பையை சேர்ந்த மிதேஷ் கங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

Tamil Girls Chat Room

திருமணம் முடிந்ததிலிருந்தே மிதேஷ் கங்கரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு நிஷாவை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிஷா செவ்வாய்க்கிழமையன்று தாங்கள் வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் 10 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கு முன்பாக 11.32 மணிக்கு தன்னுடைய தந்தை மற்றும் சகோதரனுக்கு அலைப்பேசியில் ஒரு உருக்கமான செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், மிதேஷ் கங்கரின் குடும்பத்தினர் தன்னை வீட்டில் அடைத்து வைத்து ரூ.2 கோடி வரதட்சணை வேண்டும் என உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகவும், தன்னுடைய தற்கொலைக்கு முழுக்காரணம் கணவருடைய குடும்பத்தினர் தான் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் நிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலிசார், அவருடைய கணவர் மிதேஷ் மற்றும் மாமனார் லக்ஷ்மிச்சந்தை கைது செய்துள்ளனர்.

இதோடு தலைமறைவாக உள்ள மாமியாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.