இந்திய தலைநகர் டெல்லியில் மசாஜ் பார்லரின் மறைவின் கீழ் ஒரு பாலியல் மோசடி நடத்தப்பட்ட வந்ததை டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் வீடியோ ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் தலைமையிலான குழுவினர் Nawada பகுதியில் உள்ள பல மசாஜ் பார்லர்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்னர்.

அப்போது, மசாஜ் பார்லர் என்ற பெயரில் அங்கே பாலியல் மோசடி நடத்தப்படுவதை அவர்கள் அறிந்தனர்.

சோதனை நடத்திய போது பதிவு செய்த வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு ட்விட்டரில் வெளியிட்ட சுவாதி மாலிவால், சோதனை செய்யத மசாஜ் பார்லரை அடைந்தபோது, அங்கு அறையில் சிறுமிகளுடன் சில ஆண்களை தவறான நிலையில் கண்டதாக கூறினார்.

சம்பவ இடத்தில் அதிக அளவிலான ஆணுறைகளையும் மீட்டெடுத்ததாகவும், மசாஜ் பார்லர் மேலாளரும் சிறுமிகளும் அங்கு ஒரு பாலியல் மோசடி நடத்தப்படுவதாக ஒப்புக்கொண்டனர் எனவும். இதன் மூலம் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும் என சுவாதி மலிவால் கோரியுள்ளார்.