மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த கவிஞரும் சினிமா பாடலாசிரியருமான முத்து விஜயன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை காலமானார்.

இயக்குநர் எழில் இயக்கிய துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம் பெற்ற மேகமாய் வந்து போகிறேன் என்ற பாடல் மூலம் பிரபலமான கவிஞரானவர் முத்துவிஜயன்.

Tamil Girls Chat Room

பாடலாசிரியர்கள் பலரும் இளம் வயதிலேயே மரணமடைவது சினிமா பாடலாசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் எழில் இயக்கிய துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம் பெற்ற மேகமாய் வந்து போகிறேன் என்ற பாடல் மூலம் பிரபலமான கவிஞரானவர் முத்துவிஜயன்.

இந்தப் படத்தை தொடர்ந்து பிரபு தேவா நடித்த, பெண்ணின் மனதைத் தொட்டு படத்தில் இடம் பெற்ற கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா பாடலும், அஜித், விஜய், விஜயகாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் நடித்த படங்கள் உட்பட 800 பாடல்கள் எழுதியுள்ளார். அதோடு வசனகர்த்தா, உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவர்.

அவரது மறைவு குறித்து முத்துவிஜயனின் நண்பரும் கவிஞருமான ஆசு சுப்பிரமணியம் எழுதியுள்ள குறிப்பில், திரைப்பட பாடலாசிரியர் முத்து விஜயன் காலமாகிவிட்டார்.

வருத்தமளிக்கிறது, அவரது உடல் நிலை சுகவீனமடைந்து மரணத்தை தழுவிவிட்டார். கவிதை எழுதி, பிறகு திரைப்படப் பாடலாசிரியர்கள் ஆன நிறையப் பேர் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள்.

கவிஞர்களில், கவிஞன், திரைக் கவிஞன் என்கிற பாகுபாடு என்பதெல்லாம் இல்லை. படைப்பு பாடல் வடிவத்திலும் உள்ளது.

திரைத்துறையில், செல்வாக்கு தான் முக்கியமாக இருக்கிறது. நடிகன், நடிகை இயக்குநர், இசைவாணன் கதையாசிரியன், தயாரிப்பாளர், பாடலாசிரியன் யாராக இருந்தாலும், செல்வாக்கை வைத்து, ஒரு படைப்பாளனைக் கொண்டாடுவது, மரியாதை கொடுப்பது, திரைத்துறையில் மட்டுமல்ல. இலக்கியத் துறையிலும் பெருத்த அவமானமே.

இன்று காலமான கவிஞன் முத்து விஜயன், அவனுக்கென்று ஒரு செல்வாக்கை உருவாக்காத காரணத்தால், உடல் நிலை மோசமாக இருந்த போது, திரைப்படப் படைப்புலகம் கண்டு கொள்ளாதது மிகுந்த துயரமே.

அவன் சாவை சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் கொண்டு போக ரூபாய் 20,000 தேவைப்படும் நிலையிலும், உதவ முன்வராத திரைப்பட உலகில், அவன் உடலை சென்னையிலேயே அடக்கம் செய்தனர் efjjj