சிறுமியை ஏமாற்றி கூட்டி சென்று துஷ்பிரயோகம் செய்த கட்டிட தொழிலாளியை போலிசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தின் பொட்டிக்காம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சுப்பிரமணி என்பவர் கூலி வேலைக்கு சித்தாள் வேண்டும் என்று கேட்டு சிறுமியை அழைத்து சென்றுள்ளான்.

இரவு வெகு நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த தாய் இது குறித்து போலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலிசார் நடத்திய விசாரணையில், நேற்று பிற்பகல் சிறுமி திருப்பூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற போலிசார் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தியதில் சுப்பிரமணி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்தது.

இதற்கிடையில் சுப்பிரமணி தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருப்பதாக தகவல் கிடைத்ததால், அங்கு சென்ற போலிசார் கொடூரன் சுப்பிரமணியை கைது செய்துள்ளனர்.

அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.