இந்திய அரசியலின் சாணக்கியர் என்று கருணாநிதியை கூறுவார்கள். அந்த அளவுக்கு அரசியல் தொடர்பான முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், கட்சியுடன் கூட்டணி போட்டு ஆட்சியை பிடிப்பதிலும் கனகச்சிதமாக காய் நகர்த்துவார்.

திமுக என்ற கட்சியை அறிஞர் அண்ணாவுக்கு பிறகு தனது கொள்கைகளோடு இணைத்து தமிழகத்தின் அடித்தட்டு மக்கள் வரை, கட்சியை கொண்டு சென்றவர்.

Tamil Girls Chat Room

தமிழோடும், தமிழ் பற்றோடும் வளர்ந்தவர் கருணாநிதி. இப்படி இருந்த கருணாநிதிக்கும் தனது முதல் காதல் தோல்வியில் தான் முடிந்துள்ளது.

இதனை அவரே ஒரு திருமண விழாவில் தெரிவித்துள்ளார். தமிழில் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட கருணாநிதி, தனது இளமை பருவத்தில் ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.

அப்பெண் ஒரு ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களது காதலுக்கு பச்சைகொடி காட்டிய பெற்றோர், திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்தனர்.

சடங்கு, சம்பிரதாயங்களுடன் திருமணத்தை நடத்த வேண்டும் என அப்பெண்ணின் பெற்றோர் முடிவு செய்தனர், ஆனால், பெரியார் கொள்கைகளை பின்பற்றி வந்த கருணாநிதிக்கு, சடங்கு, சம்பிரதாயங்கள் மீது நம்பிக்கை கிடையாது.

அய்யர் வந்து மந்திரம் ஓதாமல் நடக்கும் எளிமையான திருமணத்தை , அப்பெண்ணின் பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், தனது கொள்கைக்காக, காதலை கைவிட்டார் கருணாநிதி.

அதன்பின்னர் பத்மாவதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் இறந்தபிறகு தயாளு அம்மாளை திருமணம் செய்துகொண்டார். கருணாநிதி மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டவர் தான் ராஜாத்தி அம்மாள்.