ஹோட்டல் ஒன்றில் இளம்காதல் ஜோடி தூக்கில் சடலமாக இருந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரமாக செயல்பட்டு வரும் சண்டிகர் நகரத்தில் செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் இன்று காலை இளம்காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Tamil Girls Chat Room

இந்த சம்பவம் அறிந்து வந்த போலிசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலிசார் கூறுகையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள உன்னவ் மற்றும் அமேதியைச் சேர்ந்த அர்ச்சனா (17) மற்றும் விஜய் குமார் (21) என்கிற காதல் ஜோடி வெள்ளிக்கிழமையன்று ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இன்று காலை உணவு கொடுப்பதற்காக ஹோட்டல் ஊழியர்கள் அறைக்கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகத்தின் பேரில், மாற்று சாவியை கொண்டு கதவை திறந்துள்ளனர்.

அப்போது காதல் ஜோடி இருவரும் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.