விஜயகாந்த் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளதாக கூறியுள்ள அவர் மகன், கேப்டன் விரைவில் தொண்டர்கள் மத்தியில் வருவார் என கூறியுள்ளார்.

விஜய பிரபாகரன் தஞ்சாவூரில் அளித்த பேட்டியில், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு சென்றிருப்பது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக தான்.

Tamil Girls Chat Room

ஆனால் எதிர்க்கட்சியினர் இதை கிண்டல் செய்கிறார்கள்.

சந்திரயான்-2 விண்கலம் திட்டத்தில் நாம் தோல்வி அடையவில்லை. இது வெற்றிதான். அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 12 முறை விண்கலம் ஏவி அதில் தோல்வி அடைந்த பின்னர் தான் வெற்றி பெற்றுள்ளனர். நாம் முதல் முயற்சியிலேயே 95 சதவீதம் வெற்றி அடைந்துள்ளோம்.

முப்பெரும் விழா அவர் தலைமையில் தான் நடைபெற உள்ளது. அன்றைக்குத் தொண்டர்கள் அனைவரும் தலைவரை உற்சாகமாகப் பார்க்கலாம் என கூறியுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அடுத்த வாரம் திருப்பூரில் நடைபெறும் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.