நடிகை த்ரிஷாவும், நடிகர் ராணாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளியாகின.

ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் என கூறினர். இந்நிலையில் இந்தி பட இயக்குனர் கரண் ஜோஹர் நடத்தும் டி.வி நிகழ்ச்சி ஒன்றில், பிரபாஸ், ராணா, ராஜமவுலி ஆகியோர் முன்னர் கலந்து கொண்டனர்.

அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராணா, பத்து வருடத்துக்கும் மேலாக அவர் எனக்கு நல்ல தோழியாக இருந்தார். எனது நீண்ட நாள் தோழி அவர். குறைந்த காலம் இருவரும் காதலித்தோம்.

பின்னர் இது சரியாக இருக்காது என்று நினைத்ததால் அதை முடித்துக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.