தமிழகத்தில் மாணவி மேல் கை வைத்து பேசி வெளியே சொன்னால் டிசி தந்துடுவேன் என்று மிரட்டிய ஆசிரியரை போலிசார் கைது செய்தனர்.

“மேல கை வைத்து பேசுகிறார்.. வெளியே சொன்னால் டிசி தந்துடுவேன்னு மிரட்டுகிறார்” என்று பள்ளி மாணவிகள் பெற்றோரிடம் முறையிட்டுள்ளார்.

Tamil Girls Chat Room

பெற்றோர்களோ பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் அருகே உள்ளது பூச்சூர் கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இங்கு 140 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.இந்நிலையில், தலைமையாசிரியர் சுப்பிரமணி மீதுதான் இப்போது புகார் எழுந்துள்ளது. இவருக்கு வயது 53 ஆகிறது.

பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் சுப்பிரமணி தகாத முறையில் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.

Police complaint on Gov School HM near Dharmapuri

மாணவிகளின் மேல் கை வைத்து பேசுகிறார் என்றும், கை வைக்க வேண்டாம் என்று சொன்னாலும் சுப்பிரமணி கேட்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

ஸ்கூலில் நடப்பதை பற்றி வீட்டில் சொன்னால், டிசி கொடுத்து அனுப்பிவிடுவதாக மிரட்டுகிறாராம் சுப்பிரமணி. இதனால் மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர், பள்ளிக்கு வந்து, தலைமையாசிரியர் சுப்பிரமணியை எச்சரித்தும் சென்றுள்ளனர். இருந்தாலும் மீண்டும் அதேபோல மாணவிகளிடம் சுப்பிரமணி நடந்து கொண்டுள்ளார்.

இதை கேள்விப்பட்ட பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டுள்ள விவகாரம் அறிந்து விரைந்து வந்த போலீசார், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனாலும், சுப்பிரமணியை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர்.

இதையடுத்து, பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்திய போலீசார், ஏரியூர் ஸ்டேஷனுக்கு சுப்பிரமணியனை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.