காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தாயை மகளே அடித்து கொன்ற சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

தஞ்சை மாவட்டம் விளாங்குடி கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் கணவரை இழந்த நிலையில் கூலி வேலை பார்த்து தன்னுடய பிள்ளைகளை படிக்க வைத்து வந்தார். இவருடைய மூத்த மகள் அனுசியாவுக்கும் ஆனந்தராஜ் என்பவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. படிக்கிற வயதில் காதல் வேண்டாம் என தாய் பலமுறை கண்டித்தும் அனுசியா மதிக்கவில்லை.

Tamil Girls Chat Room

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுசியா காணாமல் போக, ஆனந்தராஜ்தான் மகளை கடத்திவிட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார் மகேஸ்வரி. இந்நிலையில் திடீரென அனுசியா வீடு திரும்பினார். தயவு செய்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துமாறு தாய் எவ்வளவோ கெஞ்சியும் அதை ஏற்காமல் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் அனுசியா.

தாய் கண்டிப்பதை காதலனுக்கு அனுசுயா தெரிவிக்க தாயை தீர்த்து கட்டிவிடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அனுசியாவுக்கும், மகேஸ்வரிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அனுசுயா அங்கு இருந்த இரும்பு கம்பியால் மகேஸ்வரியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மகேஸ்வரி பரிதாபமாக பலியானார்.

தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அனுசியா, அவரது காதலன் ஆனந்தராஜை கைது செய்தனர்.