திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விசாரித்து வருகிறனர்.

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே, கல்யாணிபுரத்தை சேர்ந்த சுந்தரபாண்டி என்பவர் மகன் கோபால்,  அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் முத்துமாரி.

Tamil Girls Chat Room

இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்திருந்தனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், கோபாலுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் பெண் பார்த்து வந்துள்ளனர்.

இந்த தகவலறிந்த முத்துமாரி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலன் கோபாலிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு கோபால் மறுப்புத் தெரிவித்தார்.

இதையடுத்து, முத்துமாரி காவல் நிலையத்தை அனுகி தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாறிவிட்டார் என்று கோபால் மீது அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதன் பின் வழக்கு பதிவு செய்த போலீசார் கோபாலை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை செய்து வருகிறனர்.