பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை, சிவகங்கையை சேர்ந்த இளைஞர் காதல் திருமணம் செய்துகொண்டது பெரும் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர்கள் கோபால் வசந்தா தம்பதியினர். இவர்களது மூத்த மகனான நிர்வின் பொறியியல் படித்து முடித்த நிலையில் சிங்கப்பூரில் சாஃப்ட்வேர் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
அதேபோல பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரிஜேன் அல்புரோ என்ற பெண்ணும் நிர்வின் பணியாற்றிய நிறுவனத்திலேயே பணியாற்றி வந்துள்ளார்.
image
ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய இருவரும் கடந்த மூன்றாண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்காத நிலையில் மணமகன் வீட்டார் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து திருப்பரங்குன்றத்தில் இவர்களின் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. பிலிப்பைன்ஸ் மணப்பெண்ணின் தோழிகள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்ட நிலையில் உறவினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
image
தற்போது உறவினர்களின் சம்மதம் கிடைக்கவில்லை என்றாலும், திருமணத்திற்கு பிறகு பெற்றோரின் சம்மதத்தை வாங்கிவிடுவோம் என மணமகள் தெரிவித்துள்ளார். எல்லை, மொழி தாண்டிய காதல் திருமணம் செய்துகொண்ட மணமக்களுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.