பாலிவுட் நடிகர் அனில் கபூர் தனது காதல் மனைவி சுனிதாவை பற்றியும் அவர்களது வாழ்க்கையை பற்றியும் உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.

இது குறித்து அனில்கபூர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், நண்பர் ஒருவர் மூலம் தான் சுனிதாவிடம் போனில் முதன் முதலில் பேசினேன்.

Tamil Girls Chat Room

முதலில் அவர் குரலை கேட்கும் போதே அதன் மீது எனக்கு காதல் வந்தது.

பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாக ஆகி காதலிக்க தொடங்கினோம்.

இதையடுத்து நாளைக்கே நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என சுனிதாவிடம் கேட்டேன், அதற்கு அவர் சம்மதித்த நிலையில் பத்து பேர் முன்னிலையில் எங்கள் திருமணம் நடைபெற்றது.

சினிமாவில் நான் நிலையாக இருக்க போராடிய நேரத்தில் சுனிதா தான் எனக்கு பக்கபலமாக இருந்தார்.

திருமணம் முடிந்து தேனிலவுக்கு வெளிநாடு செல்ல முடிவெடுத்தபோது எனக்கு திடீரென ஷூட்டிங் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதையடுத்து சுனிதா மட்டும் தேனிலவுக்கு தனியாக சென்ரார்.

அவர் போல மனிதரை இனி என் வாழ்க்கையில் நான் சம்பாதிக்க முடியாது.

சுனிதா சிறந்த அம்மா மற்றும் மனைவியாவார் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.