பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸுக்கும் அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கும் கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெறுகின்றனர்.

தாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக 63 வயதான ஹேங்க்ஸ் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

Tamil Girls Chat Room

தங்கள் இருவருக்கும் சளி, காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், மருத்துவரின் உதவியை நாடியதாகவும் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்ட ஹாலிவுட் பிரபலம் டாம் ஹேங்ஸ்.

வார்னர் ப்ரோஸ் தயாரிப்பில் கோல்ட் கோஸ்டில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த டாம் ஹேங்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த திரைப்படத்தில் வேலைப் பார்த்த மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா என்ற அச்சம் நிலவுகிறது.

ஆனால், படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட வில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியுள்ளது. தொடர்ச்சியாக பலருக்கும் இவ்வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு வரும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.