கேரளாவில் கொரோனா பாதிப்பின் அறிகுறியால் மரணமடைந்த தந்தையின் இறுதி சடங்கிற்கு போகமல் மருத்துவமணையில் இருந்தப்படி வீடியோ காலில் பார்த்த மகன்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவிலும் வைரஸ் தாக்குதலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 84 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த லினோ அபெல் (30) கத்தார் நாட்டில் வேலை பார்த்துவந்தார். அவரது தந்தை அபெல் அஷ்சப் (70) கடந்த 7-ம் தேதி உடல்நலக்குறைவு காரணாக கோட்டயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த லினோ அபெல் கத்தாரில் இருந்து விமானம் மூலம் 8-ம் தேதி கேரளா வந்தடைந்தார்.
கேரளா திரும்பிய லினோ தனக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் தானாக முன்வந்து தனது தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த கோட்டயம் மருத்துவமனையில் தன்னைத்தானே அனுமதித்துக்கொண்டார். அங்கு அவருக்கு கொரோனா சிறப்பு வார்டில் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தனது தந்தை அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா தொற்று பரவிவிடலாம் என எண்ணிய லினோ தனது தந்தையை சந்திக்காமலேயே தன்னைத்தானே தனிமைபடுத்திக்கொண்டார். ஆனால் அவ்வப்போது வீடியோ கால் மூலம் தனது தந்தையை பார்த்தவண்ணம் இருந்தார்.
லினோ அபெல் மற்றும் அவரது தந்தை அபெல் அஷ்சப்
இந்நிலையில், லினோ அபெல்லின் தந்தை அபெல் அஷ்சப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்தநாளே (மார்ச் 9) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தந்தையின் உயிரிழப்பால் லினோ அபெல் மிகுந்த வருத்தமடைந்தார்.
ஆனாலும், தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அது வேறு யாருக்கும் பரவி விடக்கூடாது எண்ணிய லினோ தனது தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க வேண்டாம் என முடிவு எடுத்தார். இதையடுத்து லினோ பங்கேற்காமலேயே அவரது தந்தையின் இறுதி சடங்கு நடைபெற்றது.
இந்த சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது. லினோவின் இந்த முடிவை கேளர மக்களும், மாநில முதல்மந்திரி பினராய் விஜயன் உள்பட பலரும் வணங்கியுள்ளனர்.
இதற்கிடையில், கொரோனா அறிகுறி தனக்கு இருக்கலாம் என சந்தேகத்துடன் மருத்துவமனையில் சேர்ந்த லினோ அபெலுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியான நிலையில் லினோவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற தகவல் உறுதியாகியுள்ளது