பெங்களூரு தனியார் ஓட்டலில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் நிகில் குமாரசாமி திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்து முடிந்தது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, அனிதா தம்பதியின் மகன் நிகில் குமாரசாமி. முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடாவின் பேரனான இவர், ஜாக்குவார் என்ற கன்னட படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

Tamil Girls Chat Room

இந்தநிைலயில் தனது மகன் நிகில் குமாரசாமிக்கு திருமணம் செய்து வைக்க குமாரசாமியும், அவரது மனைவி அனிதா குமாரசாமி எம்.எல்.ஏ.வும் பெண் தேடிவந்தனர்.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரியும், பெங்களூரு விஜயநகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணப்பாவின் அண்ணன் பேத்தியான ரேவதியை திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். காங்கிரஸ் தலைவர்
திருமணம் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. இதை பிரமாண்டமாக நடத்த தேவகவுடா குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். இதற்காக ராமநகர் பகுதியில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன.
இந்நிலையில் இந்தப் பணிகளை குமாரசாமி, நிறுத்தச் சொல்லிவிட்டதாக அந்தப் பகுதி ஜனதா தள (எஸ்) கட்சியின் தலைவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
‘திருமணம் ஏப்ரல் 17 ஆம் தேதி நடக்க இருக்கிறது. சுமார் ஒரு லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர். வெளிநாட்டில் இருந்தும் பிரமுகர்கள் வர உள்ளனர். இன்னும் திருமண பத்திரிகை கொடுக்க ஆரம்பிக்கவில்லை.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பரவி வருவதால் தேவகவுடா குடும்பத்தினர் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் திருமணத்தை அரண்மனை மைதானத்தில் நடத்த முடிவு செய்துள்ளனர்’ என்று கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் வெளிவரவில்லை.
இதனை அறிந்த பொது மக்கள், ரசிகர்கள் சோகத்தில் உள்ளார்கள்.