காதலித்த பெண்ணை ரூம் போட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கடலுார் மாவட்டம் அடுத்த தாழங்குடாவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மகன் முரளிதரன் (27). இவர், புதுச்சேரி அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி விடுதியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், விழுப்புரத்தை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி லாட்ஜில் ரூம் போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு அந்த பெண் போன் செய்தாலும் எடுக்காமல் தவிர்த்து வந்தார்.

பெண்ணிடம் பேசுவதையும் தவிர்த்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் நேரில் சென்று முரளிதரன் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதனையடுத்து, அப்பெண், கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.