மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து தளபதி 65 படத்தின் இயக்குனர் யார்? தயாரிக்க போவது யார் என்பது பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

Tamil Girls Chat Room

ஏப்ரலில் இப்படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜயை இயக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வந்த நிலையில் அது குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர் முருகதாஸ் தான் இப்படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் 70% இது துப்பாக்கி 2 படமாகவே இருக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

படத்தின் படப்பிடிப்புகளை ஆகஸ்ட்டில் தொடங்கி பொங்கலுக்கு தளபதி 65 படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கூறுகின்றன.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டத்தில் இருந்தே மீளாத ரசிகர்களுக்கு இந்த தகவல் கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.