இந்தியாவில் ஐந்தாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை விவாகரத்து செய்ய முத்தலாக் கணவர் கூறிய நிலையில் அதை ஏற்காத மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் சம்பலை சேர்ந்தவர் கமீல். இவருக்கும் இளம் பெண்ணொருவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்நிலையில் கமீல் மனைவி மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து பிரசவத்துக்காக தனது தாய் வீட்டுக்கு அவர் சென்றார்.

அங்கு அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் பெண் குழந்தை பிறந்ததை கேள்விப்பட்ட உடனேயே கோபமடைந்த கமீல் மனைவியை விவாகரத்து செய்வதாக போனிலேயே முத்தலாக் கூறினார்.

ஆனால் இதை ஏற்று கொள்ளாத அவர் மனைவி குடும்பத்தாருடன் காவல் நிலையத்துக்கு சென்று கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.

புகாரையடுத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.