உலகம் முழுவதும் அசச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன் பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்க்ஸ் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

Tamil Girls Chat Room

இந்நிலையில் இந்தியாவில் இன்னும் சீனா மற்றும் இத்தாலி நாட்டைப்போல பாதிப்பு வராதபோதிலும் பிரபல இந்திய கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்தர் அஸ்வின் “தமிழ் மக்களுக்கு கவனம் பத்தல…! இன்னும் விழிப்புணர்வு இல்லாம இருக்காங்க” என்று ஆவேசமாக கூறியுள்ளார். இவர் தமிழ் நாட்டை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் “தமிழ் நாட்டில் இன்னும் பாதிப்பு அடையாமல் இருப்பதற்கு அதிக வெப்ப நிலையே காரணம். அனால் இந்த நிலை நீண்ட நாட்கள் இருக்காது. மக்கள் விரைவில் இதனைப்பற்றிய விழிப்புணர்வில் தெளிவடையவேண்டும்” என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் நடக்கவிருக்கும் IPL போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடவுள்ளார்.