நம் தமிழ் சினிமாவில் இளம் புயலாக வந்த நடிகை லட்சுமி மேனன். தமிழில் இவர் பிரபு மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர்.

இவர் நடிப்பில் வெளியான கும்கி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று பல விருதுகளையும் பெற்றது, இந்த திரைப்படத்தை தொடர்ந்து லட்சுமிமேனன் சுந்தரபாண்டியன், பாண்டியநாடு. நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இதன் பிறகு தமிழில் ஒரு ரவுண்டு வந்து முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சில திரைப்படங்களை மட்டுமே நடித்து வந்தார். ஆரம்ப காலத்தில் இவர் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து விட்டு திடீரென மாடன் உடைக்கு அதிரடியாக மாறினார்.இவரின் உடல் பருமான், அதிகரித்ததால் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து கொண்டே போனது பின்பு சினிமாவை விட்டு விலகி ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தார்.

தற்போது இவர் இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் மூலம்3 ஆண்டுகளுக்கு அப்புறமாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கும் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.