சபீர் கான் இயக்கிய முண்ணா மைக்கேல் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார் நித்தி அகர்வால். பின்னர் டோலிவுட்டில் கவனம் செலுத்திய இவர் மிஸ்டர் மஜ்னு, சவ்யாசாச்சி போன்ற படங்களில் நடித்தார்.

இதனையடுத்து பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் நிதி அகர்வால் நடித்த ஐ ஸ்மார்ட் சங்கர் என்னும் படம் வேறு லெவலில் ஹிட் அடித்தது. ஆந்திரா, தெலங்கானாவில் இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. இதனால் நித்தி அகர்வாலுக்கு பாராட்டுகளும், பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.

Tamil Girls Chat Room

இந்த படத்தின் வெற்றிதான் அவர் கோலிவுட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை ஏற்படுத்தித் கொடுத்தது. இதன் மூலம் தமிழில் ஜெயம் ரவி நடிக்கும் பூமி படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்தார் நிதி அகர்வால். இந்த படத்தை லஷ்மண் இயக்குகிறார்.

இந்நிலையில், நிதி அகர்வால் இளம் நாயகர் ஒருவரின் புதிய படத்தில் கவர்ச்சி பாடல் ஒன்றிற்கு நடனமாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடுவதை எப்போதும் செய்ய மாட்டேன் எனக் கூறிவந்த நிதி அகர்வால், தற்போது ஐடெம் சாங்கிற்கு நடனமாட அதிக சம்பளம்