உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவைவிட அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மருத்துவர்களும், ஆய்வாளர்களும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

Tamil Girls Chat Room

இந்நிலையில் நாகையில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக, ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண் சாமியாரின் சீடர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீ கண்டிநத்தம் கிராமத்தை சேர்ந்த நாகத்தம்மாள் என்ற சாமியார், அம்மனிடம் அருள் வாக்கு கேட்டு, 10 நாட்கள் பூஜை செய்து இந்த மருந்தை கண்டுபிடித்ததாக அவரது சீடர்கள் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினர், அவர்களை கண்டித்த அங்கிருந்த அதிகாரிகள் அறிவுரை வழங்கி அனுப்பினர்