விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானஸா-சஞ்சீவ் ஜோடி. ரீல் ஜோடியாக எண்ட்ரி கொடுத்த இந்த ஜோடி நாளடைவில் காதலிப்பதாக அறிவித்தனர்

அதையொட்டி இவர்களுக்கு விஜய் தொலைக்காட்சியில் நிச்சயதார்த்தம் கூடச் செய்து வைத்தனர். இதையடுத்து இந்த ஜோடி கடந்த மே மாதம் 27 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டது. ஆல்யா மானஸா கர்ப்பமான நிலையில் அவருக்கு கடந்த ஜனவரியில் வளைகாப்பு நடைபெற்றது.

இந்நிலையில் நடிகை ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆல்யா, ‘எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளோம். உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் எங்களுக்கு தேவை. சஞ்சீவ் பப்பு குட்டிக்கு இன்னொரு பப்பு குட்டி வந்தாச்சு’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்களும் பிரபலங்களும் ராஜா ராணி தம்பதிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.