பஸ், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வது கவலை அளிக்கிறது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் ஒன்றாக கூடும்போது கொரோனா பரவும் அபாயம் அதிகம் இருப்பதால் நாடு முழுக்க முழு அடைப்பை அறிவிக்கும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்து வருகின்றன. ஆனாலும் மத்திய, மாநில அரசுகள் நிலைமை மோசமானால் பார்க்கலாம் என்ற வகையில் அமைதி காத்து வருகின்றன. ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒன்று இரண்டு என்று இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 250ஐ தாண்டிவிட்டது. இன்னும் மறைவாக எத்தனை பேருக்கு அது பரவியுள்ளதோ என்ற அச்சம் அரசு, மக்கள் மத்தியில் உள்ளது.

Image result for vijayabaskarபஸ், ரயில் நிலையங்களில் அதிக கூட்டம்… அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை,கொரொனா அபாயம்
இந்த நிலையில் பயம் இருந்தாலும் தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்ற கவலையில் மக்கள் வெளியே சென்று வந்துகொண்டுதான் இருக்கின்றனர். இப்படி மக்கள் அதிக அளவில் பயணங்கள் மேற்கொள்வது கவலை அளிக்கின்றது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெல்லியிலிருந்து வந்த இளைஞருடன் தொடர்புடைய 163 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அயர்லாந்திலிருந்து தமிழகம் வந்து நபருடன் தொடர்புடைய 94 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்” என்றார்.