சென்னை: தமிழ்நாட்டில் நாளை டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தினால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார். மேலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Image result for tasmark
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாட்டில் நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க உள்ளனர். மேலும் தமிழகத்தில் நாளை பேருந்துகள் மற்றும் ரெயில்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மார்க்கெட்டுகள், கடைகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை ஒருநாள் மட்டும் மூடப்படும் என்று அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குடிமகன்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.