உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் 657பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 12பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து 26 பேர் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்னர்.

தென் மாவட்டங்களான தூத்துக்குடி,திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சளி, காய்ச்சல், இருமலுக்கு சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுவரையில் 12 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

Tamil Girls Chat Room

இந்தநிலையில் திருநெல்வேலி மருத்துவமனையில் துபாயில் இருந்து திரும்பிய ராதாபுரம் இளைஞர் ஒருவர் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் இருந்து வருகிறார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வரும் அவரது உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே நெல்லை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 407 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்னர். அவர்கள் வீடுகளில் எச்சரிக்கை நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது.