தென்காசி அருகே ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் சுற்றிய இருவரை போலீசார் மடக்கி பிடித்து நூதன தண்டனை வழங்கினர்.

Tamil Girls Chat Room

சரக்கு அடிச்சிட்டு ஊர் சுற்றியவர்களுக்கு தரமான சம்பவம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள திருவேங்கடம் அருகே உள்ள மேலான்மறைநாடு பகுதியில் சட்ட விரோதமாக விற்றவர்களிடம் மது வாங்கி குடித்து விட்டு குமார் மற்றும் பிரபு ஆகிய இருவர் 144 தடை உத்தரவை மதிக்காமல் சுற்றி திரிந்துள்ளனர்.

அந்த வழியாக ரோந்து பணியில் இருந்த ஆலங்குளம் காவல் துறையினர் அவர்களை மடங்க்கி பிடித்து சாலையில் 300 மீட்டர் தொலைவில் முன்னும், பின்னும் உருளவும் புரளவும் வைத்து நூதன முறையில் தண்டனை வழங்கினர்.

மேலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ளிட்ட அணைத்து மாநிலங்களிலும் கடந்த 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு 144 தடை அமலாகியுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் உரிய ஆவணங்களுடன் வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

ஆனால் பல இடங்களில் தொடர்ச்சியாக வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வந்து போலீசாருக்கு சிரமத்தை கொடுத்து வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. அப்படி வருபவர்கள் மீது போலீசார் சட்ட நடவடிக்கைளை எடுத்து வருவதுடன், நூதன முறையில் தண்டனை கொடுத்ததும் வருகின்றனர்.