இந்தியாவில் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் மே மாதம் நடுவில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 12 பேரை இந்தியாவில் பலி கொண்ட கொரோனாவால் 600க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Girls Chat Room

ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் திடீரென வேகமெடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க இந்த லாக்டவுன் உதவும் என்பது அரசின் நம்பிக்கை.

இதனிடையே இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பு, கொரோனா தடுப்பு முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்ற நிலைமை நீடித்தால் இந்தியாவில் மே மாதம் மத்தியில் சுமார் 1 லட்சம் பேர் முதல் 13 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படக் கூடிய நிலைமை உருவாகும் என்றும் எச்சரித்திருக்கின்றனர்.

கொரோனா: ஈரானில் 24 மணிநேரத்தில் 143 பேர் பலி- உயிரிழப்பு எண்ணிக்கை 2,077 ஆக அதிகரிப்பு

மேலும் இந்தியாவில் கொரோனா பரிசோதனை என்பது மிக மிக குறைவாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனை என்பது பரந்துபட்ட அளவில் நடத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளுக்கு வெளியே கொரோனாவால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் நாம் கண்டறிய வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் மருத்துவ வசதி குறைவு என்பதை உலக வங்கியின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் சுட்டிக்காட்டப்படுகின்றன. உதாரணமாக 1,000 பேருக்கான மருத்துவமனை படுக்கைகள் என்பது அமெரிக்காவில் 2.8%; இத்தாலியில் 3.4%; பிரான்ஸில் 6.5%; சீனாவில் 3.4% என இருக்கிறது. ஆனால் இந்தியாவில் மிக குறைவாக 0.7%தான் இருக்கிறது என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.