இதுவரை கொரோனாவில் இருந்து சுமார் ஒரு 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பீதியில் மக்கள் இருந்துவரும் நிலையில் இந்த தகவல் ஒரளவுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது என்னுடைய சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் சுமார் 1.20 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் . பொதுவாக தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் லேசான தலைவலி காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்ற இரண்டு வாரங்களில் குணமாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது . இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் இந்நிலையில் தொற்றுநோய் வேகம் எடுத்துள்ளது நிலையில் சுமார் 1.20 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது .

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது . சீனாவில் சுமார் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு அதில் சுமார் 3 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்தனர் , 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸிலிருந்து குணமாயினர். இத்தாலியில் சுமார் 59 ஆயிரம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5400 பேர் உயிரிழந்துள்ளனர் கிட்டத்தட்ட 7000 பேர் நோயிலிருந்து குணமாகியுள்ளனர், அமெரிக்காவில் இந்த வைரஸ் காய்ச்சலால் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 700 எட்டியுள்ளது , சுமார் 300க்கும் அதிகமானோர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர் இந்த நோய் பரவலாக ஏற்பட்டுவரும் நிலையில் ஏற்கனவே இதயம் மற்றும் நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்சினைகளால் கடுமையாக அவதிப்பட்டு வருபவர்கள் மற்றும் 60 வயது கடந்தவர்கள் இந்த நோய் தீவிர பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இந்த தொற்றுநோய் பெரும்பாலான மக்களுக்கு சாதாரண இருமல் , காய்ச்சல் மற்றும் லேசான தலைவலி அறிகுறிகளை மட்டும் தருகிறது அதாவது லேசான அறிகுறிகளுக்கு மட்டுமே ஆளாகின்றனர். பொதுவாக இரண்டு வாரங்களில் நோயிலிருந்து குணம் அடைகின்றனர் என்றும் மேலும் கடுமையான நோயை அனுபவிப்பவர்கள் குணமடைய 6 வாரங்கள் வரை ஆகலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது , ஏறக்குறைய 14 சதவீதத்தினர் கடுமையான நோயையும் 5 சதவீதத்தினர் மோசமான நோயையும் சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . அதேபோல் இளைஞர்களுக்கு இந்த நோய் பரவாது என கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு , 50 வயதுக்கு குறைவானவர்கள் அதிக அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.