நாகர்கோவில்:
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரத்தியேக வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அனுமதிக்கப்பட்டார். இவரது சொந்த ஊர் கோடிமுனை. குவைத் சென்றிருந்த அவர் கடந்த மூன்றாம் தேதி தமிழ் நாடு திரும்பியிருந்தார். மே மாதத்தில் இந்தியாவில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை பிற பாதிப்புகள் அவருக்கு, மூளைக்காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். அவரது ரத்த மாதிரிகள் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நெல்லையில் உள்ள பரிசோதனை பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 40 வயதுதான் அவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தாரா என்பது பற்றி பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு தான் உறுதியாக தெரிய வரும். இறந்த நபருக்கு 40 வயதுதான் ஆகிறது என்ற தகவல் சற்று அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவர், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்திருக்கக் கூடாது என்ற பதற்றம் கன்னியாகுமரி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

பெண் கன்னியாகுமரி அரசு மருத்துமனையில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு இல்லாத 59 வயது பெண்மணி இறந்தார். அவருக்கும் சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தப் பெண்மணி இறந்த பிறகு அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் நெல்லை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டன. பாதிப்பில்லை இந்த ஆய்வு முடிவுகளில், அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது, என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். இந்த நிலையில், தற்போது, 40 வயது நபர் கொரோனா வார்டில் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்க கூடாது என மக்கள் வேண்டிக்கொள்கிறார்கள்