பாதிக்கப்பட்டோரைக் கண்டறிந்து, தனிமைப்படுத்தி, பரிசோதித்து சிகிச்சை அளிப்பது, யாருக்கு தொற்று பரவியுள்ளது என்பதைக்க் கண்டுபிடிப்பது ஆகியவற்றை விரைவான செய்ய வேண்டும்.

ஹைலைட்ஸ்:

ஊரடங்கை கொரோனா ஒழிப்புக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள்
ஊரடங்கு மட்டும் கொரோனாவை ஒழித்துவிடப் போதுமானது அல்ல எனவும் எச்சரிக்கை.

உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவை நடைமுறைபடுத்தியுள்ள நிலையில், அதனால் மட்டும் கொரோனாவை ஒழிக்க முடியாது என உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே போதாது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இது குறித்துப் பேசியுள்ள உலக சுகாதார இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தியுள்ளன. ஊரடங்கு உத்தரவு மக்களை வீட்டிலேயே இருக்க வைத்து, சுகாதாரத்துறையின் அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால், வைரசை அழிக்க இது மட்டும் போதாது.” என்றார்.

அனைத்து நாடுகளும் ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தை கொரோனா ஒழிப்புக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அதற்காக சுகாதாரப் பணியாளர்களையும் பரிசோதனை மையங்களை அதிகரிப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஏழை நாடுகளுக்காக 2 பில்லியன் டாலர் நிதியுதவி: ஐ. நா. அறிவிப்பு

“பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, தனிமைப்படுத்தி, பரிசோதித்து சிகிச்சை அளிப்பது, பாதிக்கப்பட்டவர்கள் மூலம் யாருக்கு தொற்று பரவியுள்ளது என்பதைக்க் கண்டுபிடிப்பது ஆகியவற்றை விரைவான முறையில் செய்ய வேண்டும். நடைமுறையில் உள்ள சமூகப் பொருளாதாரக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இதைச் செய்ய வேண்டும்.” எனவும் அறிவுறுத்தினார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 4.7 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் மட்டும் 2 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேருக்கு மேல் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்