கேரளாவில் மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதால் விரக்தியடைந்த 38 வயது நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொரோனாவின் தீவிர தாக்கத்தால் நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 21 நாட்கள் லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்னதாகவே பல மாநிலங்கள் இதனை நடைமுறைப்படுத்தவும் தொடங்கின.

Tamil Girls Chat Room

கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ள கேரளாவில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. குறிப்பாக மதுபான கடைகளும் கேரளாவில் அடைக்கப்பட்டன. தமிழகத்திலும் மதுபான கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.

அனைத்து மாநிலங்களிலும் அத்தியாவசிப் பொருட்கள் மட்டும்தான் வாங்க முடியும் என்கிற நிலை இருக்கிறது. இந்நிலையில் கேரளாவின் திரிசூர் மாவட்டத்தில் குன்னகுளம் பகுதியைச் சேர்ந்த சனோஜ் குலங்கர (வயது 38) என்ற நபர் மது குடிக்காமல் இருக்க முடியவில்லை என்ற விரக்தியில் தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக கூறிய அவரது குடும்பத்தினர், மதுபழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார் சுனோஜ். தற்போது மதுபான கடைகள் மூடப்பட்டதால் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த நிலையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிவித்தனர்.