கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்த தினக்கூலி தொழிலாளர்களுக்கு மாநில அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது.

ஆனால் வெளிமாநில தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து நிவாரண நிதியும் பெற முடியாத சூழலில் உள்ளனர். அன்றாட வாழ்கை தேவையை அவர்களால் பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் நடந்தே தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

Tamil Girls Chat Room

ராஜஸ்தானை சார்ந்த பலர் உத்திரபிரதேசத்தில் உள்ள அகமாதபாத்தில் கட்டுமானப் பணிகள் மற்றும் இதர வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்த அவர்கள் அங்கிருந்து ராஜஸ்தானுக்கு 120 கி.மீ தூரம் வரை நடந்தே செல்ல முடிவெடுத்து உள்ளனர்.

வெளிமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் குழந்தை, உறவினர்கள், உடைமைகளுடன் சொந்த ஊருக்கு திரும்பி உள்னர். இவர்களின் பரிதாப நிலை அனைவரையும் கலங்க வைத்துள்ளது

இதனிடையே வாழ்வாதாரத்தை இழந்து சொந்த ஊருக்கு செல்லும் இவர்களை போலீசார் கடுமையாக தாக்கும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது. மிகவும் அபாயகரமான இந்த சூழலில் உன்னதமாக பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு மத்தியில் சிலர் கொஞ்சம் கூட கருணை இல்லாமல் நடந்து கொள்கின்றனர் என பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.