பிரிட்டன் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சருக்கே கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை தொடர்ந்து, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இங்கிலாந்து மக்கள் கதிகலங்கி போய் உள்ளனர்.

Tamil Girls Chat Room

பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் சார்லசுக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அவரே தமது ட்விட்டர் பதவில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் உறுதி செய்துள்ளார்.

பிரிட்டன் பிரதமருக்கும் கொரோனா தொற்று!!!

போரிஸ் ஜான்சனை தொடர்ந்து, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரான மேத் ஹேங்காக் தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அவருக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, வியாழக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில் அவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தன்னைதானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து மேத் ஹேங்காக் தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இப்படி தங்கள் நாட்டின் இளவரசர், பிரதமர், சுகாதாரத் துறை அமைச்சர் என்று உயர் பொறுப்புகளில் உள்ளவர்களே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளதால் இங்கிலாந்து நாட்டு மக்கள் கதிகலங்கி போயுள்ளனர்.