இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
அது போல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 67 பேர் குணமடைந்துவிட்டனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 743 லிருந்து 748 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, விமான நிலையங்களில் இது வரை 15, 24, 266 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.