வெளிநாட்டில் இருந்து தாயம் திரும்பிய நிலையில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாலாசூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி திரும்பியுள்ளார்.

Tamil Girls Chat Room

இதனிடையே டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தில் அந்த இளைஞர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளார்.

சோதனையில் அந்த இளைஞருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் கடந்த 18ம் திகதி இரவு 9 மணியளவில் சிகிச்சைக்காக கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அங்க பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. பின்னர் திடீரென மருத்துவமனையின் 7-வது மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர் அதிகாரிகளின் செயலே தற்கொலைக்கான காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.