தமிழகத்தில் 35 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் உள்ளிட்ட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களையும் மூடப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட 6 மணி நேரத்தில், தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.210 கோடிக்கு மதுவிற்பனை ஆனதாக தெரிவிக்கப்பட்டது.

Tamil Girls Chat Room

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, வருவாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் வட்டாட்சியர் கிருஷ்ணவேணி தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு மதுவிற்பனை செய்வதை கண்டு பிடித்துள்ளனர்.

உடனே அந்த இடத்திற்குள் நுழைந்த அதிகாரிகளை பார்த்து, மது விற்பனை செய்தவர்களில் 4 பேர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அதனையடுத்து அங்கிருந்த 47 மது பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், மதுவிலக்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.