ஸ்பெயினில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,800க்கு மேல் உயர்ந்துள்ளது.

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 769 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் கொரோனா உயிர் பலி எண்ணிக்கை 4,800க்கு மேல் உயர்ந்துள்ளது.
அந்நாட்டு அரசின் தகவல்படி இதுவரை 4,858 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Tamil Girls Chat Room

அந்த நாட்டில் மொத்தம் 64,059 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 சதவீதம் உயர்ந்துள்ளது.
முந்தைய நாளில் 18 சதவீத உயர்வைவிட சற்று குறைந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் சீனா பக்கம் சாய்ந்துவிட்டது: டொனால்ட் ட்ரம்ப்

மார்ச் 14ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.
இதனை ஏப்ரல் 11ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 24 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் மட்டும் 2.5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
1.25 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.