காய்கறி வாங்க மார்கெட்டிற்கு சென்ற போது துப்பாக்கி முனையில் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து வைத்த ரவுடிகளின் செயல் அப்பகுதி மக்களை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்த ஊரடங்கு நடைமுறைபடுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் பீஹார் மாநிலம் இங்குள்ள வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த அமித் (25) மற்றும் அவரது தந்தை காய்கறிகள் வாங்க மார்கெட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கியை காட்டி அமித்தையும் அவரது தந்தையையும் வழிமறித்துள்ளனர்.

அவர்களது பிடியிலிருந்து அமித்தின் தந்தை தப்பித்து ஓடியுள்ளார். ரவுடி கும்பல் அமித்தை மட்டும் காரில் ஏற்றி அருகில் இருந்த கிராமத்திற்கு கடத்தி சென்று, அப்பகுதியில் இருந்த இளம் பெண்ணுக்கும் அமித்துக்கும் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மேலும் தப்பி ஓடிய அமித்தின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்து அமித்தை மீட்டுள்ளனர். போலீசாரை கண்டதும் அமித்தை கடத்திய ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியது.

இதையடுத்து அமித்துக்கும் அந்த பெண்ணிற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா என்றும், ரவுடி கும்பலுக்கும், அந்த இளம் பெண்ணுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், எதற்காக அமித்தை அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.